Thursday, October 9, 2014

அவசர சமையல்சமையல் கலை



• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால் மாலை நேரத்துக்கு ஏற்ற கார சிற்றுண்டி தயார்.
• அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.
• அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.
• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து  வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.
• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு சில நிமிடம் வேக வைத்து அதில் தேங்காய்த் துருவல் சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.
• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.
• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..

Friday, August 15, 2014

காராமணி பொரியல்


தேவையானவை: karamani
காராமணி -1 டம்ளர்
வெங்காயம் -2
காய்ந்த மிளகாய் -3
தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை -10 இலை
செய்முறை
காராமணியை முன்தினம் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். காலையில் காராமணியை நன்கு கழுவிவிட்டு, குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
ஒரு விசில் வைத்து இறக்கிக் கொள்ளவும். காராமணி வெந்ததும் அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், மிளகாயையும் மிக்ஸியில் போட்டு லேசாகத் திரிதிரியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் காராமணியையும் போட்டு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். உடலுக்கு மிகவும் நல்லது.
இந்தப் பொறியல் கேரளாவில் மிகப் பிரபலம். அவர்கள் தேங்காய் எண்ணெய் விட்டு காராமணி பொறியலை செய்வதால் ருசி அதிகமாக இருக்கும்.

பப்பாளி பஜ்ஜி




தேவையானவை:pappali
பப்பாளிக்காய் -1,
பஜ்ஜி மிக்ஸ்,
சமையல் எண்ணெய்,
சிறிது உப்பு,
பெருங்காயப் பொடி.
செய்முறை:
வாழைக்காய் போன்று பப்பாளிக் காயை சீவிக் கொள்ளவும்.
பஜ்ஜி மிக்ஸை தண்ணீர்விட்டு பிசைந்து கொள்ளவும்.
அதில் சிறிது பெருங்காயப் பொடியையும் தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும். பிறகு பப்பாளித் துண்டுகளை பஜ்ஜி மிக்ஸில் நனைத்து எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
பப்பாளியை பழமாக மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்கள், இந்த பஜ்ஜிக்குப் பிறகு பஜ்ஜிக்காகவும் பப்பாளியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
வெள்ளரிக்காயின் தோல்லை சீவி எறும்பு புற்றின் அருகில் வைத்தால் போதும், எறும்புகள் காணாமல் போய்விடும்.
ஆடையில் ஒட்டியுள்ள சுவிங்கம்மை எடுக்க ஆடையை குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் ஒருமணி நேரம் வைத்துப் பின் துவைக்க வேண்டும்.
வென்னீரில் அரை எலுமிச்சம்பழத்தை வெட்டிப் போட்டு அதில் ஊற வைத்துத் துவைத்தால் வெள்ளைத் துணிகள் பளிச்சிடும்.
எலுமிச்சம்பழத்தில் இருந்து அதிக ஜூஸைப் பெற பழத்தை ஒருமணி நேரம் வென்னீநீரில் போட்டு பின் பிழியவும்.
முட்டைக்கோஸில் உள்ள வாசனை போக அதனை வேகவைக்கும்போது சிறிது பிரட் துண்டை அதில் போட்டுவிட்டால் போதும்.

விதவிதமாக சமைக்கலாம் ருசிக்கலாம்



ரவா உருண்டை, பயத்தம் உருண்டை, கடலைமாவு உருண்டை தயாரிக்கும்போது சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு குளுக்கோஸ், பால்பவுடர், ராகிமால்ட், பாதாம் மிக்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காயுடன் ஊறவைத்த நிலக்கடலையும் சேர்த்து அரைத்துச் செய்தால் பர்பி அதிக சுவையுடன் இருக்கும்.
குலோப் ஜாமூன் மிக்ஸுடன் சர்க்கரை பொடி கலந்து பிசைந்து சற்று தடிமனான சப்பாத்திகளாகத் திரட்டி, சிறிய டைமண்ட் வடிவில் வெட்டி நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்தால், மாலை நேர சிற்றுண்டி தயார்.
ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால், அதிக சுவையுடன் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
அவசரப் பாயசம் தயாரிக்க இரண்டு முந்திரிப் பருப்பு, கொஞ்சம் கசகசாவை அம்மியில் அரைத்துக் கடலைமாவில் சேர்த்து கொதிக்கவிடவும். சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்துப் பால் சேர்த்தால் பாயசம் ரெடி.
பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர்விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
மைசூர்பாகு செய்வதற்கு எல்லாரும் கடலைமாவை மட்டும்தான் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் கடலை மாவில் கலந்து மைசூர்பாகு தயாரித்தால், வாயில் போட்டால் உடனே கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்.

அவசரத்துக்குக் கைகொடுக்கும் சமையல்


• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால் மாலை நேரத்துக்கு ஏற்ற கார சிற்றுண்டி தயார்.
• அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.
• அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.
• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து  வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.
• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு சில நிமிடம் வேக வைத்து அதில் தேங்காய்த் துருவல் சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.
• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.
• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..

Monday, September 16, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - விமர்சனம்




வருத்தப்படாத வாலிபர் சங்கம் - விமர்சனம்

டைமிங் காமெடி, கலர்ஃபுல் காட்சிகள், அசரவைக்கும் பாடல்கள் என கலகலப்பான படம். வாரம் ஒருமுறை வரிசைகட்டி வரும் காமெடிப் படங்களில் இதுவும் ஒன்று, ஆனால் சத்யராஜும் சிவகார்த்திகேயனும் இதில் ஸ்பெஷல்! கதை ஒன்னும் புதியதாக இல்லை என்றாலும் திரைக்கதையும் காட்சியமைப்பும் கலகலப்பாகவே அமைந்திருக்கிறது. 


ஓப்பன் பண்ணா ஒரு அழகான கிராமம் - அங்க ஒரு அம்சமான பொண்ணு - அந்தப் பெண்ணை அடிக்கடி வம்புக்கு இழுக்கும் ஒரு சுமாரான வாலிபன் - கட் பண்ணா, வில்லனாக துப்பாக்கியோடு வரும் அந்த பெண்ணின் அப்பா - ஊரைவிட்டு காதலர்கள் ஓடிப்போறாங்க - க்ளைமாக்ஸ்! இதை அப்படியே டெவலப் பண்ணா அதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கதை. இது ஒரு கதையான்னு நினை வேண்டாம், இந்தப் படத்துலயும் கடைசியா ஒரு புது விஷயம் இருக்குல்ல... 

காலரைத் தூக்கிவிட்டு கலர்கலர் சட்டைப் போட்டு அழகான பெண்களுக்கு ஐ லவ் யூ சொல்லும், எம்.ஏ. எம்.ஃபில் படிச்ச பட்டதாரி போஸ்பாண்டி(சிவகார்த்திகேயன்). வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் இவர் தான். ஊருக்கு நடுவில் ஒரு ஆலமரம், அதன் நிழலில் படுத்து தூங்குவது தான் சங்கத் தலைவரின் அன்றாட வேலை.

அந்த ஊர் ஸ்கூல் டீச்சராக கல்யாணி (பிந்து மாதவி). அவரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ண வேண்டும் என்பதுதான் போஸ்பாண்டியின் ஆசை. அதற்காக அந்த ஸ்கூல் பள்ளி மாணவியான லதாபாண்டியிடம்(அறிமுக நாயகி ஸ்ரீதிவ்யா) லவ் லெட்டர் கொடுத்து விடுகிறார். இவருக்கு இன்னொரு வேலையும் உண்டு. ஊருக்குள் இல்லீகலாக எது நடந்தாலும் அதை அரசாங்கத்திற்கு தெரியபடுத்தி பலபேரை டெரர் ஆக்குவது! 


தன் தாத்தா காலத்து மிலிட்டரி துப்பாக்கியை தன் புல்லட் வண்டியில் மாட்டிவிட்டு, கம்பீரமாக வலம் வருபவர் சிவனாண்டி. ஊரில் செல்வாக்கு நிறைந்த சிவனாண்டி தன் மகள் லதாபாண்டிக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்கிறார். மேஜராகாத ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கிறது அதை தடுத்து நிறுத்துங்கள் என நீதி கேட்டு காவல் துறைக்குப் போகிறார் போஸ்பாண்டி. காவல் துறையும் தன் கடமையை செய்கிறது. 

தனக்குப் பிடிக்காத தன் கல்யாணத்தை நிறுத்தியது போஸ்பாண்டிதான் என நாயகி லதாபாண்டிக்கு தெரியவர, காதல் மலர்கிறது. போஸ்பாண்டி கல்யாணி டீச்சருக்கு கொடுத்தனுப்பும் லவ் லெட்டர்களை தனக்கானதாக மாற்றி காதல் மழையில் நனைகிறார் லதாபாண்டி. ஒரு நாள் அந்த துயர செய்தி போஸ்பாண்டியை வந்துசேர்கிறது. கல்யாணி டீச்சருக்கு கல்யாணம் என்பது தான் அது! 

வழக்கமாக லதாபாண்டியை பள்ளி சீருடையில் பார்த்த போஸ்பாண்டி, ஊர்த்திருவிழாவில் சேலைகட்டி வரும் லதாபாண்டியைப் பார்த்து அசந்துபோகிறார். கல்யாணி டீச்சருக்கு கொடுத்தனுப்பிய ஊதா கலரு ரிப்பன் லதாபாண்டியின் ஜடையில் இருப்பதையும் கவனிக்கிறார். பிறகு என்ன ஒருபுறம் இவர்களுக்குள் கண்ணா பிண்ணா என காதல் வளர... மறுபுறம் தன் மகள் கல்யாணத்தை நிறுத்தியது யார்? என்று தீவிர விசாரணையில் இருந்து வருகிறார் சிவனாண்டி. அது மட்டும் இல்லை வீடு புகுந்து தான் உயிராக நினைக்கும் துப்பாக்கியை திருடியவனையும் தேடிவருகிறார். ஆனால் இரண்டுமே போஸ்பாண்டி தான் என்பது அவர் மகள் லதாபாண்டிக்கு மட்டும் தான் தெரியும்.


சிவனாண்டி ஊரில் இல்லாத நேரத்தில் அவர் வீட்டு பசுமாடு தவரி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. சங்கத் தலைவருக்குத்தான் பொதுநலம் அதிகமாச்சே... உடனே ஃபயர் சர்வீசுக்கு போன்போட்டு வரச்சொல்லி, அவர்கள் வரும்வரை கிணற்றில் குதித்து மிரண்டு கிடக்கும் பசுமாட்டை பாதுகாத்து வருகிறார் போஸ்பாண்டி. இந்தக் காட்சியில் தான் லதாபாண்டியின் இதயத்தில் பட்டும் இல்லை, அவரின் அம்மாவின் மனதுக்குப் பிடித்தவராகவும் மாறிவிடுகிறார்.

ஒருநாள் லதாபாண்டியின் வீட்டுக்கு சென்று அவரோடு ரொமாஸ் செய்வதில் பிசியாக இருக்க்கும் போஸ்பாண்டி, லதாபாண்டியின் அப்பா சிவனாண்டியிடம் போஸ்பாண்டி வசமாக சிக்கிக்கொள்ள, லதாபாண்டிக்கு அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. ஊரைவிட்டு ஓட ஹீரோவும் ஹீரோயினும் பிளான் போடுகிறார்கள், ஓடிப்போன இருவரும் சிவனாண்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள் என ஊரெல்லாம் செய்தி பரவுகிறது...  ஆனால் உண்மை அது இல்லை... என்ன நடந்தது என்பது க்ளைமாக்சில்!

ஆளும் சரி, நடிப்பும் சரி, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு தகுதியாக தலைவராக போஸ்பாண்டி என்கிற சிவகார்த்திகேயன். ஆட்டம் பாட்டம் என ஆள் அசத்திவிட்டார். அவருக்கு செயலாளராக கோடி என்கிற சூரி. சங்கத்துக்கு நீ தலைவரா இருப்ப... உனக்கு பின்னால உன் பையன்... அப்புறம் உன் பேரன்... நாங்கள்ளாம் பரம்பரை பரம்பரயா செயலாளராகவே இருக்கனுமா? என்று புரட்சி(!) வசனம் பேசி ‘எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என புதிய சங்கத்தை தொடங்கும் சூரி காட்சிக்கு காட்சி காமெடி பட்டாசுகளை அள்ளிவிடுக்கிறார். புதுமுகம் ஸ்ரீதிவ்யா, பார்க்க பளிச்சுன்னு இருக்கு - நடிப்பு நச்சுன்னு இருக்கு! 


சத்யராஜ் - ஒரு சீனியர் நடிகருக்கான திறமையை 100% நிரூபித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் வரை தன்னை சீரியசாக  காட்டிக்கொள்ளும் சத்யராஜ், கடைசியில் கலகலப்பாக மாறி தன் உண்மையான கேரக்டரில் கலக்குவது அசத்தல்! சத்யராஜ் சிவகாத்திகேயனை மாப்ள என்று சொல்வதும், சிவகார்த்திகேயன் சத்யராஜை  மாமா என்று சொல்வதும் பலே காம்பினேஷன்! என் மூணாவது பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டா நானே என் காதை அறுத்துக்குறேன் என்று சொல்லும் சத்யராஜ், க்ளைமாக்சில் தன் காதை தானே அறுத்துக்கொள்வது சுவாரஸ்யம்!  

டி.இமான் - படத்தின் எல்லா பாடல்களும் லட்டு மாதிரி இருக்கு. பாட்டு வரும் நேரம் வெளியே போகும் ஆசாமிகள் கூட பாட்டுக்காக உள்ளே வரும் அளவிற்கு இசை வேட்டையாடுகிறார். ’ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்... - இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா! அவங்க கண்ணு நம்ம கல்லறன்னு தெரிஞ்சுபோச்சுடா’ என்று வாலிபர்களுக்கு ஏற்ற தத்துவங்களை பாடல்வரிகளில் தாராளமாய் தந்திருக்கிறார் யுகபாரதி. 

துப்பாக்கியை காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் சத்யராஜ், தன் மகளிடன் துப்பாக்கி பாத்தியாமா என்று கேட்டதும், ’பாத்தேன்பா... விஜய் நடிச்ச படம் தானே’ என்று கலகலப்பான வசனங்களுக்கு படத்தில் பஞ்சம் இல்லை. வசனம் இயக்குனர் எம்.ராஜேஷாச்சே..! இயக்குனர் பொன்ராம், முதல் படத்திலேயே பொன்னாக மின்னுகிறார். அடுத்தடுத்து படங்களிலும் தக்கவைத்துக் கொள்ள வாழ்த்துகள்! 


இந்தப் படத்தில் ஏண்டா நடித்தோம் என்று சிவகார்த்திகேயனோ, சத்யராஜோ வருத்தப்படமாட்டார்கள். இந்த படத்துக்காக பணம் போட்டோமே என்று தயாரிப்பாளரும் வருத்தப்படமாட்டார். மிக முக்கியமாக இந்த படத்தை ஏண்டா பார்க்க வந்தோம் என்று ரசிகர்களும் வருத்தப்பட மாட்டார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - அசத்தும் காமெடி - அமோக வெற்றி! 
thanks for nakkeran